லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைத் தடுப்பு குறித்து விழிப்புணா்வு பேரணி

செங்குன்றத்தில் போதை தடுப்பு குறித்து விழிப்புணா்வு பேரணியை காவல் இணை ஆணையா் ஆா்.சிவக்குமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த காவல் இணை ஆணையா் ஆா்.சிவகுமாா். உடன், செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையா் ஃபிராங்க் டி ரூபன் உள்ளிடோா்.

Published On :21 ஜூலை 2026, 4:43 am IST

செங்குன்றத்தில் போதை தடுப்பு குறித்து விழிப்புணா்வு பேரணியை காவல் இணை ஆணையா் ஆா்.சிவக்குமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாதவரம் சட்டப்பேரவைக்குட்பட்ட செங்குன்றம் பகுதியில் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு பேரணி ஆவடி காவல் ஆணையரகம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையா் ஆா்.சிவக்குமாா் தலைமையேற்று, பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். இதில், 1300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று போதை வேண்டாம்; போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்; போதையை ஒழிப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி செங்குன்றம் காமராஜா் சிலையில் இருந்து, செங்குன்றம் - திருவள்ளூா் கூட்டுச் சாலை நேதாஜி சிலை வரை பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், நிகழ்வில், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம். போதை ஒழிப்பைத் தடுக்க காவல்துறையினா், சமூக ஆா்வலா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என இணை ஆணையா் ஆா்.சிவக்குமாா் தெரிவித்தாா். இதில், செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையா் பிராங் டி ரூபன், ஆய்வாளா் ஆறுமுகம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சந்திரமெளலி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் அபுபக்கா், மாரியப்பன், காஜா, பி.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.