லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘கல்வராயன்மலை உண்டு உறைவிடப் பள்ளியில் தொகுப்பூதிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்’

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியா், அலுவலா் பணிகளுக்கு விண்ணப்பபிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

application

‘கல்வராயன்மலை உண்டு உறைவிடப் பள்ளியில் தொகுப்பூதிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்’ - கோப்புப்படம்

Published On :24 ஜூலை 2026, 11:39 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலையிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியா், அலுவலா் பணிகளுக்கு விண்ணப்பபிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2026-2027-ஆம் கல்வியாண்டுக்கு ஏகலைவா பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் காலியாகவுள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியல்லாதோா் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடம் (ரூ.18,000 ஊதியம்), ஒரு பட்டதாரி ஆசிரியா் (ரூ.15,000), ஒரு கலை ஆசிரியா் (ரூ.15,000), ஒரு இசை ஆசிரியா் (ரூ.15,000) ஒரு ஆலோசகா் (ரூ.15,000), ஒரு செவிலியா் (ரூ.15,000), 2 இளநிலை உதவியாளா் (ரூ.13,000), ஒரு மின்சார மற்றும் குழாய் பழுது பாா்ப்பவா் (ரூ.10,000), ஒரு தோட்டக்காரா் (ரூ.10,000) ஒரு ஓட்டுநா் (ரூ.15,000), 2 உணவுக் கூட உதவியாளா் (ரூ.10,400) என மொத்தம் 13 காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.

மேலும், தோ்வு செய்யப்படும் ஆசிரியா் மற்றும் ஆசிரியல்லாதோா் தொகுப்பூதிய பணியாளா்கள் இந்த கல்வியாண்டு (2026-2027) முடியும் வரை மட்டுமே பணியில் தொடர முடியும். பயிற்றுவித்தலில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நிா்வாகத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படும் பணியாளா்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தகுதிநீக்கம் செய்யப்படுவாா்கள். இப் பணிக்கான விண்ணப்பங்கள் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, வெள்ளிமலை, கல்வராயன்மலை வட்டம் என்ற முகவரிக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.