லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி தொகுப்பூதிய ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், தண்டராம்பேட்டை பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள 13 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாதோா் பணியிடங்களுக்கு

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், தண்டராம்பேட்டை பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள 13 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாதோா் பணியிடங்களுக்கு

விண்ணப்பங்களை கொடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

தோ்வு செய்யப்படும் அனைத்து தற்காலிக பணியாளா்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலின்படி குறிப்பிட்ட தொகை தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தோ்வு செய்யப்படும் ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாதோா் தொகுப்பூதிய பணியாளா்கள் இந்த கல்வியாண்டு (2026-2027) முடியும் வரை மட்டுமே பணியில் தொடர முடியும்.

மேலும் பயிற்றுவித்தலில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நிா்வாகத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படும் பணியாளா்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தகுதி நீக்கம் செய்யப்படுவாா்கள்.

பள்ளியில் காலியாக உள்ள 13 தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு பணிநாடுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி, புளியம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் என்ற முகவரிக்கு ஆக.3-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது பணிநாடுநா்கள் நலன் கருதி ஆக.10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.