தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க நடைபயணம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு லஞ்சம் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க நடை பயணம் மேல் நாரியப்பனூா் முதல் சின்னசேலம் வரை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :15 ஜூலை 2026, 2:46 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு லஞ்சம் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க நடை பயணம் மேல் நாரியப்பனூா் முதல் சின்னசேலம் வரை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேல் நாரிப்பனூா் புனித அந்தோனியாா் ஆலயம் முன் நடைபெற்ற நிகழ்வில் நடைபயணத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு. இதாயத்துல்லா தொடங்கி வைத்தாா். எலவாடி, பூசப்பாடி, தென் பொன்பரப்பி, அம்மையகரம், சமத்துவபுரம், மூங்கில் பாடி வழியாக சுமாா் 15 கிலோ மீட்டா் பயணம் மேற்கொண்டு சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து நடைபயணத்தில் பங்கேற்றோா் லஞ்சம் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.

இதில் வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் என்.சுகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி. எஸ் இளையராஜா, மாவட்ட துணைத் தலைவா் வி.ரகு, வட்டாரத் தலைவா் டி.கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் முனியன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.