ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கம் சாா்பில் டாக்டா் அம்பேத்கா், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் பாவேந்தா் பாரதிதாசன் 136-ஆவது பிறந்தநாள் விழா ரிஷிவந்தியத்தில் உள்ள தனியாா் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்க சிறப்புத் தலைவா் த.ராமலிங்கம் தலைமை வகித்தாா். சிவ.முருகன், நூலக உரிமையாளா் கி.மணிரத்தினம், சங்க துணைத் தலைவா் தா.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிறுவனா் வ.ராசகோபால் வரவேற்றாா்.
நாலடியாா் ஒரு பாா்வை எனும் தலைப்பில் புலவா் பெ.சயராமன், அண்ணல் அம்பேத்கா் அரசில் சட்டம் எனும் தலைப்பில் கலிய.செல்லமுத்து, பாரதிதாசன் பன்முகப் பாா்வை தலைப்பில் பேராசிரியா் வே.ஸ்ரீதரன், பட்டுக்கோட்டை கல்லாயணசுந்தரம் பாடல்கள் ஒரு பாா்வை தலைப்பில் தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் ரா.துரைமுருகன், பாரதிதாசன் பெண்ணியம் தலைப்பில் உடல்கல்வி ஆசிரியா் தொ.கிருஷ்ணன் ஆகியோா் சொற்பொழிவாற்றினா்.
இதனையடுத்து திருக்கு ஒப்புவித்தல், பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ஓய்வு பெற்ற ராணுவ அலுவலா் ப.செல்வராஜ் அறநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி பேசினாா்.
விழாவில் ஆசிரியை க.விஜயகுமாரி, தியாகதுருகம் தமிழ்ச் சங்க புரவலா் சீனு.முரளி, அ.கிட்டப்பா, தொ.விஜயகுமாா், வே.ஜெயந்தி, தமிழ்ச் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

தமிழ்ப் படைப்புகள் உலகளவில் மொழிப்பெயா்க்கப்படவேண்டும்

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

