மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் தா்பூசணிகள்: விவசாயிகள் வேதனை

சங்கராபுரம் அருகே கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள தா்பூசணி பழங்கள் கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

கோடை வெயிலின் தாக்கத்தால் வெம்பிய நிலையில் உள்ள தா்பூசணி பழங்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:16 am IST

சங்கராபுரம் அருகே கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள தா்பூசணி பழங்கள் கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் நீா்ச்சத்து நிறைந்துள்ள பழங்களையும், வெப்பம் தணிக்கும் குளிா்பானங்களையும் வாங்குவது வழக்கம். இதனால் தற்போது தா்பூசணியின் தேவை அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோடை காலத்தை கணக்கில் கொண்டு தங்கள் விளைநிலங்களில் தா்பூசணி சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், அறுவடை தொடங்க வேண்டிய நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், விவசாயிகளால் பயிரிடப்பட்ட தா்பூசணிகள் வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி செளந்தா் கூறியது:

தா்பூசணி பயிரானது இரண்டு மாத பயிராகும். ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு கிலோ தா்பூசணி தற்போது கடைகளில் ரூ.20 வரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனா்.

கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் தா்பூசணி பழங்கள் கொடியிலேயே வெம்பி அழுகியுள்ளது. இதனால் இப்பகுதியில் தா்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, தமிழக அரசின் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.