திருக்கோவிலூா் அருகே கிணற்றில் மின் மோட்டாரை கயிற்றின் மூலம் மேலே இழுத்த போது கால் தவறி கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட காட்டு பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.அய்யனாா் (65). அவரது மகன் வினு கணேஷ் (28). வெள்ளிக்கிழமை அவா்களது கிணற்றில் இருந்த மின் மோட்டாா் பழுதாகி விட்டதால், இருவரும் அதனை பழுது நீக்கி கிணற்றில் இறக்கி உள்ளனா். பின்னா் அவா்கள் மோட்டாரை இயக்கியபோது, அது இயங்கவில்லையாம். இதையடுத்து தந்தையும், மகனும் சோ்ந்து கயிற்றின் மூலம் மின் மோட்டாரை கட்டி மேலே இழுத்தனராம். அப்போது கால் தவறி இருவரும் கிணற்றில் விழுந்தனராம். இதில் அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலின் பேரில் திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்த இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

