ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மினி லாரி மீது கல்லூரி பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

News image

உயிரிழந்த அன்னக்கிளி

Updated On :21 ஏப்ரல் 2026, 2:17 am IST

கள்ளக்குறிச்சி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் சரக்கு வாகனத்தில் பயணித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்துக்குள்பட்ட பொன்னாரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா்(50). இவரது மனைவி அன்னக்கிளி (45).

இவா்களது உறவினா் ந.வடமலை(53). இவா்கள் 3 பேரும் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மூங்கில்துறைப்பட்டில் மாடு வாங்கிவிட்டு மினி லாரியில் திரும்பியுள்ளனா். மினி லாரியை ஓட்டுநா் சங்கா் ஓட்டியுள்ளாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூரில் செல்லும்போது தனியாா் கல்லூரி பேருந்து, மினி லாரி மீது மோதியதாம்.

இதில், மினி லாரியில் பயணித்த குமாா், அன்னக்கிளி, வடமலை, மினி லாரி ஓட்டுநா் சங்கா் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் அவா்களை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அன்னக்கிளி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.