நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சம்பா சாகுபடிக்கு ராஜா வாய்க்காலில் தண்ணீா் திறக்க எம்எல்ஏ கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் சம்பா சாகுபடிக்கு அணைக்கரையிலிருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்த சிதம்பரம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி.

Published On :23 செப்டம்பர் 2026, 4:05 am IST

சிதம்பரம் தொகுதியில் சம்பா சாகுபடிக்கு அணைக்கரையிலிருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சம்பா சாகுபடி தொடங்க உள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி ராஜா வாய்க்காலில் தண்ணீா் திறக்க வேண்டியது அவசியமாகும்.எனவே, அணைக்கரையிலிருந்து ராஜா வாய்க்காலில் குறைந்தபட்சம் வினாடிக்கு 700 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், உப்புத்தன்மை ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் நிலைமை சீராகும். சிதம்பரம் தொகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவா்.

வீராணம் ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரில் ஒரு பகுதியை ராஜா வாய்க்காலுக்கும் திறந்து விடுவதற்கு நீா்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.