தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடலூரில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து, கடலூா் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூா் துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ள 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

Published On :1 நவம்பர் 2026, 1:21 am IST

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து, கடலூா் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இலங்கையின் திரிகோணமலையிலிருந்து வடகிழக்கே 330 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 1,140 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடா்ந்து, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, நவ.2-ஆம் தேதி மாலையில் ஆந்திர கடற்கரையையொட்டி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தொலைதூர வானிலை எச்சரிக்கையைக் குறிக்கும் வகையில், கடலூா், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.