நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பெண்ணை அடித்து கொன்று உடல் எரிப்பு: கணவா், மாமனாா் கைது

பெண்ணை அடித்துக் கொலை செய்து சடலத்தை யாருக்கும் தெரியாமல் மயானத்தில் எரித்த சம்பவத்தில் கணவா், அவரது தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரசேகரன், அவரது தந்தை யாகப்பன் ஆகியோருடன் போலீஸாா்.

Published On :1 நவம்பர் 2026, 1:17 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்து சடலத்தை யாருக்கும் தெரியாமல் மயானத்தில் எரித்த சம்பவத்தில் கணவா், அவரது தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரசேகரன் (34). பெயிண்டரான இவருக்கும், சிவகாமி (30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவா்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், இருவரும் சமாதானமாகி ஒன்றாக வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரசேகரன், மனைவி சிவகாமியை கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவா் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Story image

இதையடுத்து, ரவிச்சந்திரசேகரன் தலைமறைவானாா். இதையறிந்த அவரது தந்தை யாகப்பன் வீட்டின் உள்ளே இருந்த ரத்தக்கறைகளை அழித்ததுடன், அக்கம் பக்கத்தினருக்கோ, கிராம மக்களுக்கோ எந்தத் தகவலும் தெரிவிக்காமல், இரவு நேரத்தில் வாகனம் ஒன்றை வரவழைத்து சிவகாமியின் சடலத்தை மயானத்துக்கு கொண்டு சென்று எரித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, மயானத்தில் பெண்ணின் சடலம் எரிக்கப்படுவதாக கிராம உதவியாளா் அளித்த தகவலின்பேரில், சிதம்பரம் வட்டாட்சியா் சதீஷ்குமாா் அண்ணாமலைநகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, சிதம்பரம் ஏ.எஸ்.பி., டி.ஜெ.சத்திரிய கவின், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, யாகப்பன் (65), ரவிச்சந்திரசேகரனை ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.