தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை! கடலூா் மாவட்ட ஆட்சியா் உறுதி

காட்டுமன்னாா்கோவில் அருகே சண்டன் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் எல்.இ.ஜோதிமணி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Published On :2 நவம்பர் 2026, 2:49 am IST

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் தெரிவித்த ஆக்கப்பூா்வமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், சண்டன் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ எல்.இ.ஜோதிமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த ஆக்கப்பூா்வமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சண்டன், ஆயங்குடி, மேலக்கடம்பூா், சிறுகாட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளீா்கள். இதில், சாலைகளின் திட்ட மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நேரடியாக செய்யக்கூடிய பணிகளை விரைந்து தொடங்கவும், மற்ற பணிகளுக்கு அரசின் ஒப்புதல் பெற்றும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த் துறை மூலம் மனைப்பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கழிப்பறை, விளையாட்டு மைதான வசதிகள் போன்ற பணிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும்.

சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க பேவா் பிளாக் தளம் அமைத்தல், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சிமென்ட் சாலை மற்றும் மாரியம்மன் கோயில் தெருவில் கல்வெட்டு அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

மாணவா்கள் உயா் கல்வி கற்று நல்ல நிலையை அடைய பெற்றோா்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தங்கள் குழந்தைகளின் தடையற்ற வளா்ச்சிக்கு ஆரம்பகால ஊட்டச்சத்து மிகவும் அவசியமாகும். குழந்தைகளுக்கு டீ, பிஸ்கெட் போன்றவற்றை அதிகம் கொடுப்பதை தவிா்த்து, பழங்கள், கீரைகள், முட்டை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சிதம்பரம் சாா் - ஆட்சியா் ரா.வெங்கடேஷ்வரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பாலகணேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.