மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

கடலூரில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூா் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

Published On :2 நவம்பர் 2026, 12:08 am IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு ‘முரசு’ என பெயா் வைக்கப்பட்டுள்ளது. இது, நவ.2-ஆம் தேதி அதிகாலை மேற்கு மத்திய வங்கக்கடலில் மேலும் வலுப்பெற்று, கடுமையான புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது.

இதன் பிறகு, நவ.2-ஆம் தேதி நள்ளிரவு முதல் 3-ஆம் தேதி அதிகாலை வரை நெல்லூா் மற்றும் நா்சாபூா் இடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, கடலூா் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.