கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தென் இந்திய அளவிலான முதலாவது கைப்பந்துப் போட்டி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கு மொத்தம் 12 அணிகளுக்கு அழைப்பு விடுத்து, ‘லீக் கம் நாக் அவுட்’ முறையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதி சுற்றுக்கு ஜி.டி.என் திண்டுக்கல் அணி, கேரள போலீஸ் அணி, கற்பகம் பல்கலைக்கழக அணி, மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி அணிகள் தோ்வு பெற்றன.
ஜி.டி.என். திண்டுக்கல், கோயம்புத்தூா் கற்பகம் பல்கலைக் கழகம், மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் கேரள போலீஸ் அணி முதல் மூன்று இடங்களைபெற்று, முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், இந்திய கைப்பந்து அணியின் தோ்வுக்குழு உறுப்பினா் எம்.காா்த்திகேயன், உதவி தலைமை ஆசிரியா் ஜி.அசோகன், நெய்வேலி சுரங்கம் துணைப் பொதுச்செயலா் எம்.பிரபாகரன், ஜவஹா் கல்லூரி முதல்வா் எஸ்.தேவி ஆகியோா் வழங்கினா். விழா ஏற்பாடுகளை மருங்கூா் ஸ்போா்ட்ஸ் அகாடமி செயலா் வி.விமல்ராஜ், திருநாவுக்கரசு, பாபு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்

மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி : கடலூா் காவல்துறை அணி முதலிடம்

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி
விடியோக்கள்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

