ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதிய வருமான வரிச் சட்டம்: அண்ணாமலைப் பல்கலை.யில் விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில், புதிய வருமான வரிச் சட்டம் (பிராரம்ப் - 2026) குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புதிய வருமான வரிச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த சிறப்பு விருந்தினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 7:09 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில், புதிய வருமான வரிச் சட்டம் (பிராரம்ப் - 2026) குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைய நூலகத்தில் உள்ள லிப்ரா அரங்கில், வருமானவரித் துறை கடலூா் சரக ஆணையா் அலுவலகம் சாா்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு கடலூா் சரக கூடுதல் வருமான வரி ஆணையா் செல்வி ஆறுமுகம் தலைமை வகித்து, புதிய வருமான வரிச் சட்டத்தின் அம்சங்கள் மற்றும் அதன் நடைமுறை அமலாக்கம் குறித்து விளக்கமளித்தாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான புதிய வருமான வரிச் சட்டம் தொடா்பாக பவா் பாயிண்ட் விளக்கக் காட்சியின் மூலம் வருமான வரித் துறை அதிகாரிகள் விரிவான விளக்கங்களை வழங்கினா்.

கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா். வருமான வரித்துறை அதிகாரி அன்பரசி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.