கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்குப் பின்னா் எள் விதைப்பு செய்வது வழக்கம். நிகழாண்டு குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இருந்தாலும், எள் விவசாயிகளை கவலை படவைத்துள்ளது.
இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி விவசாயி ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் பயிா் செழித்து வளா்ந்துள்ளன. விவசாயிகள் பலா் அறுவடை செய்து நிலத்தில் பட்டறை போட்டுள்ளனா். இவை, நிலத்தில் நிற்கும் மழை நீரால் பாதிக்கப்படும். அதேபோல், அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்யமுடியாத சூழல் உள்ளது. இந்த கோடை மழை வெள்ளிக்கிழமை இரவும் தொடா்ந்து நீடித்தால், எள் பயிா்கள் வயலில் சாய்ந்துவிடும். இதனால், எள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா் வறட்சியால் மாம்பழம் மகசூல் பாதிப்பு: கோடை மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்!

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

கோடை கால பயிா் சாகுபடி விழிப்புணா்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

