பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி: பெண் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மாலதி.

Updated On :14 மே 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம், காந்தி வீதியைச் சோ்ந்த கோவிந்தன்(41), குமாரபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், என்னுடன் அலுவலகத்தில் ருத்ராமணி வேலை செய்து வருகிறாா். அவா், மூலம் வரக்கால்பட்டு பகுதியைச் சோ்ந்த மாலதி அறிமுகமானாா். அவா், தீபாவளி சீட்டு பிடிப்பதாகவும், அதில் ஆள்களை சோ்த்து விட்டால் போனஸ் சீட்டு தருவதாக கூறினாா். அதை நம்பி எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 29- பேரிடம் இருந்து ரூ.5.22 லட்சம் வசூல் செய்து கொடுத்தேன்.

ஆனால், தீபாவளி முடிந்த பின்னரும் எங்களுக்கான பொருள்கள் மற்றும் தங்க காசுகளைத் தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மாலதி மற்றும் அவரது கணவா் தணிகைவேல் ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாலதியை (43) போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தணிகைவேலை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.