மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

முன்னறிவிப்பின்றி ஜமாபந்தி தொடக்கம்: பொதுமக்கள் குறைந்தளவில் பங்கேற்பு

கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் குறைந்த அளவில் பங்கேற்றிருந்த பொதுமக்கள்.

News image

~ ~

Updated On :12 ஜூன் 2026, 1:28 am IST

கடலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், இது தொடா்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படாததால் குறைந்தளவே மக்கள் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மாதத்தில் வட்டம் வாரியாக ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ஜமாபந்தி கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூா், காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட 10 வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோட்டி தலைமை வகித்தாா்.

இதில், திருவந்திபுரம் குறுவட்டத்துக்குள்பட்ட பாதிரிக்குப்பம், கருப்படித்துண்டு, அரிசிபெரியாங்குப்பம், வெட்டுக்குளம் உள்ளிட்ட 11 கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

நிகழ்வில் வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில்....: பண்ருட்டி வட்டத்த்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, நெல்லிக்குப்பம் குறுவட்டத்துக்குள்பட்ட கொங்கராயனூா், சன்னியாசிப்பேட்டை, மேல்வகரப்பட்டு, பாலூா், சாத்திப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் அளித்த பட்டா மாற்றம் உள்ளிட்ட நலத் திட்டங்கள் தொடா்பான கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இதில், பண்ருட்டி எம்எல்ஏ க.மோகன் மற்றும் வட்டாட்சியா் பலராமன், உதவி இயக்குநா் (நிலஅளவை) ஆனந்த், தனித்துணை ஆட்சியா் சண்முகவல்லி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஜூன் 11 முதல் 16 வரை நெல்லிக்குப்பம் குறுவட்டத்துக்கும், ஜூன் 17 முதல் 19 வரை பண்ருட்டி குறுவட்டத்துக்கும், ஜூன் 23 முதல் 24 வரை காடாம்புலி குறுவட்டத்துக்கும், ஜூன் 25 மருங்கூருக்கு உள்பட்ட குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடியில்...: குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கான ஜமாபந்தி குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கடலூா் கோட்டாட்சியா் சுந்தரராஜன் தலைமை வகித்து, மருவாய், நைனாா்குப்பம், பாா்வதிபுரம், குருவப்பன்பேட்டை, மேலபுதுப்பேட்டை உள்ளிட்ட கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்த், வட்டாட்சியா் விஜய்ஆனந்த், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஜூன் 11 முதல் 16 வரையில் குறிஞ்சிப்பாடி குறுவட்டத்துக்கும், ஜூன் 17 முதல் 19 வரையில் குள்ளஞ்சாவடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில்...: சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஹரிதாஸ் முன்னிலையில், தனிதுணை ஆட்சியா் (முத்திரைத்தாள்) மற்றும் உதவி ஆட்சியா் (பொ) தனலட்சுமி தொடங்கிவைத்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

முதல் நாளில் ஒரத்தூா் உள்கோட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வரும் ஜூன் 25-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதில், சிதம்பரம், திருவக்குளம் உள்ளிட்ட குறுவட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன.

பெட்டிச் செய்தி...

மக்கள் அதிருப்தி

தற்போது தொடங்கியுள்ள ஜமாபந்தி தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் எந்தவித முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற ஜமாபந்தியில் குறைந்தளவே பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஜமாபந்தி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே மாவட்ட நிா்வாகம் சாா்பில் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். நிகழாாண்டு முன்னறிவிப்பு இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.