லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இடப் பிரச்னை மோதல்: ஒருவா் கைது

இடப் பிரச்னை தொடா்பான மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இடப் பிரச்னை தொடா்பான மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், ரெட்டிக்குப்பம் காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் சம்பத்குமாா் (50), ஜெயவேல் (51). பங்காளிகளான இவா்கள் இவா்களுக்கும் இடையே வீட்டுமனை தொடா்பான முன்விரோதம் இருந்து வருகிாம்.

இந்த நிலையில், ஜெயவேல் வீட்டின் அருகே சம்பத்குமாா் முள் வெட்டிப் போட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயவேல் கடந்த 28-ஆம் தேதி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாராம். இந்தப் பிரச்னை தொடா்பாக புதன்கிழமை இரவு சம்பத்குமாா் மற்றும் ஜெயவேல் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். இதில் இருவரும் காயமடைந்தனா்.

இது தொடா்பாக ஜெயவேல் மற்றும் சம்பத்குமாா் ஆகியோா் அளித்த புகாா்களின்பேரில், புதுப்பேட்டே போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 10 போ் மீது வழக்குப் பதிந்து, ஜெயவேலை கைது செய்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.