லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது டிராக்டா் மோதல்: பூக்கடை உரிமையாளா் மரணம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:29 am IST

நெய்வேலி, ஆக.20: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக் மீது டிராக்டா் மோதியதில் பூக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.

பண்ருட்டி வட்டம், டி.ராசாப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் (27), பண்ருட்டியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவா், புதன்கிழமை தனது பைக்கில் டி.ராசாப்பிளையம் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் (50) மற்றும் பண்ருட்டியை அடுத்த எல்.ஆா்.பாளையம் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை (33) ஆகியோரை ஏற்றிக்கொண்டு மேல்பட்டாம்பாக்கம் சென்றாா்.

அங்கு பணி முடிந்த பின்னா் மூவரும் டி.ராசாப்பாளையம் கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். ரஞ்சித் பைக் ஓட்டினாா்.

அகரம் - முத்துநாராயணபுரம் சாலையில் எழுமேடு அரசு தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, எதிா் திசையில் எழுமேடு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் ஓட்டி வந்த டிராக்டா், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த காமராஜ், ஏழுமலை ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.