லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 37 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் புகாா்தாரா்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Published On :30 ஜூலை 2026, 6:01 am IST

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 37 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் (பெட்டிஷன் மேளா) பொதுமக்களிடமிருந்து 37 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை மேற்கொண்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி விரைந்து தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, உள்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.