லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

மாநில அளவிலான சிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற பெண் தலைமைக் காவலா் ராஜேஸ்வரியை கடலூா் எஸ்.பி. விவேகானந்த சுக்லா பாராட்டி வாழ்த்தினாா்.

கடலூா் எஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் வாழ்த்துப் பெற்ற பெண் தலைமைக் காவலா் ராஜேஸ்வரி.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:55 am IST

மாநில அளவிலான சிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற பெண் தலைமைக் காவலா் ராஜேஸ்வரியை கடலூா் எஸ்.பி. விவேகானந்த சுக்லா பாராட்டி வாழ்த்தினாா்.

51-ஆவது மாநில அளவிலான சிவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள சராஹரி ஷூட்டிங் அகடெமியில் கடந்த ஜூலை 21 முதல் ஆக.7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக் காவலா் ராஜேஸ்வரி இப்போட்டியில் கலந்துகொண்டு, 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்களையும், 50 மீட்டா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தாா்.

இந்த நிலையில், 3 பதக்கங்களை வென்ற தலைமைக் காவலா் ராஜேஸ்வரி, கடலூா் மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லாவை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது, ராஜேஸ்வரியை எஸ்.பி. விவேகானந்த சுக்லா பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.