லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறந்த எழுத்தாளா்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆக. 28-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த சிறந்த எழுத்தாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளதால், தகுதியுடையோா் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

Published On :31 ஜூலை 2026, 2:12 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்த சிறந்த எழுத்தாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படவுள்ளதால், தகுதியுடையோா் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறன்களை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் சிறந்த 11 எழுத்தாளா்களின் படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, எழுத்தாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

2025-26-ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளா்களைத் தோ்வு செய்வதற்காக தகுதியுடைய விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரா்கள் தங்களது படைப்பின் இரண்டு பிரதிகளை அச்சு வடிவிலும் டிஜிட்டல் வடிவிலும் விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும்ஆகஸ்ட் 28, -க்குள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.