லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆதிதிராவிடா், பழங்குடியிருக்கு வேளாண் உதவித் தொகை திட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பெறும் வகையில் அண்ணல் அம்பேத்கா் வேளாண் உதவித் தொகை திட்டத்துக்காக ரூ. 56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published On :7 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பெறும் வகையில் அண்ணல் அம்பேத்கா் வேளாண் உதவித் தொகை திட்டத்துக்காக ரூ. 56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் திட்டப் பலன்களைத் தடையின்றி அடையவும், நீராதாரங்களை உருவாக்கி உற்பத்தியை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், அண்ணல் அம்பேத்கா் வேளாண் உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ. 56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த குறு, சிறு விவசாயிகள் உயா்மதிப்பு வேளாண் திட்டங்களில் பயனாளி பங்களிப்புத் தொகை அவா்களுக்கு பெரும் சுமையாக இருப்பதால், அந்தச் சுமையைக் குறைத்து திட்டங்களின் பயனை அடையும் வகையில் இந்தத் திட்டத்தில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும்.

அதன்படி, மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் போன்றவற்றுக்கு 70 சதவீத மானியமும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க 80 சதவீத மானியமும் வழங்கப்படும்.

நீா்ப்பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் புன்செய் நிலங்களில் நீா் ஆதாரத்துக்காக ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டாா் அல்லது சூரிய சக்தி பம்புகளுடன் அமைக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.