லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழ்நாடு நாள் விழா போட்டிகள்: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, கடலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Published On :29 ஜூலை 2026, 5:18 am IST

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, கடலூா் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.