லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உதகையில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பெற்ற ஜூலை 18-ஆம் தேதியை முன்னிட்டு, உதகையில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்கள். உடன், தமிழ் வளா்ச்சித் துறையினா்.

Published On :15 ஜூலை 2026, 1:04 am IST

தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பெற்ற ஜூலை 18-ஆம் தேதியை முன்னிட்டு, உதகையில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பெற்ற ஜூலை 18-ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளா்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டுரைப் போட்டியில் 51 மாணவா்களும், பேச்சுப் போட்டியில் 48 மாணவா்களும் பங்கேற்றனா். இதில், கட்டுரைப் போட்டியில் மிளிதேன் அரசு உயா்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி ஜெ.ஹா்சிதா முதலிடமும், நெடுகுளா அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவிகள் அ.தன்யாஸ்ரீ இரண்டாம் இடமும், ச.யானிஷா மூன்றாம் இடமும் பிடித்தனா்.

பேச்சுப் போட்டியில் புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி கி.நிகரிலி முதல் இடமும், புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவா் சி.விஷாக் இரண்டாம் இடமும், ஏகலைவா மாதிரி மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி சி.சுமிதா மூன்றாம் இடமும் பிடித்தனா்.

முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தி.திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.