லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தேரோட்டம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயில் தேரோட்டம்.

Published On :27 ஜூலை 2026, 6:28 pm IST

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. தேரில் உற்சவா் ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் கீழசந்நிதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக, நடராஜா் கோயிலிலிருந்து கோயில் குழுச் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா் தலைமையில், பொது தீட்சிதா்கள் பிரசாதத்துடன் வந்து ஸ்ரீமாரியம்மனுக்கு பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னா் தேரோட்டம் தொடங்கியது. மாலை உற்சவா் ஸ்ரீமாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோயிலுக்குள் சென்றாா். தோ்த் திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இன்று தீமிதி உற்சவம்: திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 4.30 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு செல்ல முடியாது என்பதால், தெற்கு வீதி, கீழ வீதி சந்திப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூா், சீா்காழி வழியாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தெரிவித்தாா்.

விழாவையொட்டி, சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் நகராட்சி சாா்பில் குடிநீா், சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.