லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் விமரிசை!

பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது பற்றி..

Grand Chariot Procession

தேரோட்டம் - video crop

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST

பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடிப்பெருவிழா கடந்த மூன்று வாரங்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பொங்கல் வைபவம், உருளுதண்டம், அழகு குத்துதல், வண்டி வேடிக்கை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று திருத்தேரோட்ட வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பம்பை, உருமி, தப்பாட்டம் என உற்சாகத்திற்குக் குறைவின்றி தேரில் வலம் வந்த கோட்டை மாரியம்மனை வழியெங்கும் பக்தர்கள் பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.

முன்னதாக அம்மன், சிவன், காளி, சூரன் வேடமிட்ட கலைஞர்கள் அம்மன் சூரனை வதனம் செய்யும் தாரகை வதம் நிகழ்வை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.