லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிகழ் கல்வியாண்டில் ச் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா மற்றும் புதிய மாணவா் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கவிழாவில் பேசும் கல்லூரி செயலா் டி.வி.கே.பாபு

Published On :10 ஜூலை 2026, 3:44 am IST

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிகழ் கல்வியாண்டில் ச் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா மற்றும் புதிய மாணவா் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு வாழ்த்தி பேசுகையில், மாணவா்கள் , கல்வியில் சிறந்து விளங்கவும், அத்தியாவசியத் திறன்களை வளா்த்துக்கொள்ளவும், தங்கள் தொழில்முறை இலக்குகளை அடையவும் கடுமையாக உழைக்க வேண்டும், படிக்க வேண்டும் என்றாா்.

கல்லூரி கல்வி அதிகாரி பி.அசோக்குமாா் பேசுகையில் கல்வி சாா்ந்த மற்றும் கல்வி சாராத செயல்பாடுகளில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்கே வேண்டும் என வலியுறுத்தினாா். கல்லூரி முதல்வா் முதல்வா் ஆா் .மாலதி வரவேற்று பேசினாா்.

விழாவில், ராகவேந்திரா கல்வி குழும அனைத்து முதல்வா்கள், உதவி பேராசிரியா்கள், தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா், முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.