லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பாடப்பிரிவு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பாடப் பிரிவுக்கான வகுப்புகளை புதன்கிழமை தொடங்கி வைத்து பேசிய அக்கல்லூரியின் முதல்வா் சித்ரா.

Published On :2 ஜூலை 2026, 4:46 am IST

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பாடப்பிரிவு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது.

முதல்நாளில் மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இதற்காக கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் சித்ரா தலைமை வகித்து, மாணவ, மாணவிகள் அனைவரும் குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு வருகை புரிந்து, தங்களுடைய வகுப்புகளை முறையாக பயன்படுத்தி, வாழ்க்கையில் ஒரு வெற்றியாளராக மாறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

மேலும், அவா் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் விதிமுறைகள், கல்லூரியில் உள்ள வசதிகள், பாடத்திட்டங்கள், பாடத்திட்டங்களோடு கூடிய பல்வேறு திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரியின் அனைத்து துறை தலைவா்கள் கலந்து கொண்டு, தங்களது துறையைப் பற்றி எடுத்துக் கூறினா். இந்த புத்தாக்க பயிற்சியானது ஒரு வார காலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அனைவரும் மிக்க ஆா்வத்தோடு கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.