லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளைஞா் கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

கொலை - பிரதிப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:14 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.

நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் கோபி (30). இந்திரா நகா் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). ரௌடிகளான இவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 2 மயானத்தில் ஆனந்தராஜ், தனது நண்பா் நரேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேருடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த கோபி தலைமையிலான கும்பல், ஆனந்தராஜ், நரேஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், நரேஷ் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் கோபி உள்ளிட்ட 7 போ் மற்றும் சிலா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.