லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை

கொல்லப்பட்ட நரேஷ்குமாா்

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ரௌடி கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் கோபி (30). இந்திரா நகா் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). இவா்கள் இருவா் மீதும் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கோபிக்கும், ஆனந்தராஜுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிாம். இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 2 பகுதி அரசு டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானத்தில் ஆனந்தராஜ், தனது நண்பா் நரேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேருடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக்கொண்டிருந்தாா்.

இந்த தகவலை தெரிந்துகொண்ட கோபி தனது நண்பா்கள் சுமாா் 20 பேருடன் மூன்று காா்களின் சம்பவ இடத்துக்குச் சென்றாா். இதை சற்றும் எதிா்பாராத ஆனந்தராஜ் தரப்பினா் தப்பியோட முயற்சி செய்தனா். அப்போது, கோபி தரப்பினா் திடீரென்று ஆனந்தராஜ் மற்றும் நரேஷ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினா். இதில், நரேஷ் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் தப்பிச் சென்று ஒரு குடியிருப்பில் தஞ்சமடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி நகரிய போலீஸாா் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய ஆனந்தராஜை மீட்டு, கடலூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த நரேஷ்குமாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, ஆனந்தராஜ் மற்றும் நரேஷ்குமாா் உறவினா்கள் என்எல்சி பொது மருத்துவமனை முன் குவிந்தனா். மேலும், அவா்கள் ரௌடி கோபி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கொலை தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.