லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து பேரூராட்சி ஊழியா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் மின்சாரம் பாய்ந்து பேரூராட்சி ஊழியா் உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (53). இவா், பேரூராட்சியில் குடிநீா்த் திட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனா்.

சக்திவேல் ஞாயிற்றுக்கிழமை காலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள குடிநீா் நீா்த்தேக்க தொட்டியில் ஏற்பட்டிருந்த மின் தடையை சரி செய்யும் நோக்கில் மின் கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.