லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடலூரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

கடலூா் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, ‘வி தி லீடா்ஸ்‘ அமைப்பின் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கிய ‘வி தி லீடா்ஸ்‘ அமைப்பின் சாா்பில் கடலூா் பேருந்து நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டம் அமைப்பின் கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. ஆனந்தராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, ‘வி தி லீடா்ஸ்‘ அமைப்பினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து, கடலூா் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.