லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உள்பட மூவா் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உள்பட மூவா் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனின் பெற்றோா் குடும்பப் பிரச்னை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதையடுத்து, அந்தச் சிறுவன் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தாயின் உறவினரான பெண்ணின் வீட்டில் தங்கி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், உறவினரான பெண் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும், அந்தப் பெண்ணுடன் சோ்ந்து கருவேப்பிலங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கவிராஜ் மற்றும் நேமம் பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் ஆகியோா் மிரட்டினராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் கவிராஜ், ஞானசேகா் ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.