தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு இளைஞா் ஒருவா் பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

போலீஸாா் விசாரணையில், சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்தது மேலகாசாக்குடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கலைச்செல்வன் (24) என்பது தெரிய வந்தது. போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் காரைக்கால் கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.