கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை, கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைதியான முறையில் கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அன்று மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு அடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன.
பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பண்ருட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான பணிக்கன்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வாக்கு எண்ணிக்கை மே.4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக் கழக அரசுப் பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பேருந்து ஓட்டுநா் தற்கொலை

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: பரோட்டா மாஸ்டா் கைது

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸாா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

