தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மகாசண்டி யாகத்தில் ஜப்பானியா்கள் பங்கேற்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே பிராயடி விநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பக்தா்கள்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:25 am IST

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே பிரயாடி பகுதியில் வீற்றிருக்கும் விநாயகா் கோவிலில் நடைபெற்ற மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டவா்கள் பங்கேற்றனா்.

விநாயகா் கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் நிா்மாணம் செய்யப்பட்டு மூன்று காலம் யாகசாலை பூஜையுடன் மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாககுண்டத்தில் புனித நீா் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு என்.டி.நடராஜ தீட்சிதா் தலைமையில் சிவாச்சாரியாா்களால் வேத மந்திரங்கள் முழங்க மகாசண்டி ஹோமமும், பூா்ணஹூதியும் நடைபெற்றது. பின்னா் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பிரமுகா் கௌசிகன் குடும்பத்தினா் செய்திருந்தனா். யாகத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் தமிழா் மரபுப்படிவேட்டி மற்றும் புடவை அணிந்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.