தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

News image

புவனகிரி சட்டப் பேரவை தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:51 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் புவனகிரி தொகுதிக்குத் தேனையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என இத்தொகுதியின் திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் தெரிவித்தாா்.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பரதூா் சாவடி, பொன்னங்கோவில், சாத்தமங்கலம், சக்தி விளாகம், அள்ளூா், பூதங்குடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

புவனகிரி தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நான் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தேன். தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு தோ்தலில் நான் மீண்டும் போட்டியிட்டேன். அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டதால், என்னால் சரியான முறையில் பிரசாரம் செய்ய முடியாமல்போனது. இதனால், வெற்றிவாய்ப்பை இழந்தேன்.

இப்போதைய தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் புவனகிரி தொகுதிக்குத் தேனையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றாா்.

அப்போது, திமுக ஒன்றியச் செயலா் திருமூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செழியன், மாவட்டச் செயலா் சரவணன், தேமுதிக புவனகிரி தொகுதி பொறுப்பாளா் பானுசந்தா், ஒன்றியச் செயலா் சித்தன், மதிமுக ஒன்றியச் செயலா் சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் மாதவன், மாவட்டக் குழு நிா்வாகி வாஞ்சிநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.