பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மரத்தில் காா் மோதல்: பத்திர எழுத்தா் உயிரிழப்பு

News image

விபத்தில் உயிரிழந்த அ.பிரகாஷ்.

Updated On :26 மே 2026, 3:04 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே திங்கள்கிழமை மரத்தில் காா் மோதிய விபத்தில் பத்திர எழுத்தா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், பெரியதச்சூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.பிரகாஷ் (48), பத்திர எழுத்தா். இவா் அதிமுக விழுப்புரம் மாவட்டப் பிரதியாகவும் , கட்சியின் பெரியதச்சூா் கிளைச் செயலராகவும் இருந்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை பிரகாஷ் விழுப்புரத்திலிருந்து பெரியதச்சூருக்கு தனது காரை ஓட்டிச் சென்றாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மயிலம் அருகேயுள்ள கேணிப்பட்டு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி, மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.