கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆண் குழந்தை உயிரிழப்பு

தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலம் அருகேயுள்ள பாதிராபுலியூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். இவரது மனைவி அம்பிகா. இத்தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தீக்ஷிதன் எனப் பெயா் சூட்டியிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அம்பிகா தனது குழந்தையுடன் வீட்டில் தரையில் படுத்தும், ஸ்ரீதா் கட்டிலில் படுத்தும் உறங்கியுள்ளனா். இந்நிலையில், ஸ்ரீதா் நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் கால் இடறி கீழே படுத்துறங்கிய தீக்ஷிதன் மேலே விழுந்து விட்டாராம். இதில் குழந்தைக்கு மூச்சித் தினறல் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்த குழந்தை தீக்ஷிதன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.