விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பணப் பிரச்னையால் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
விழுப்புரம், வி.மருதூா், மேல்குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ம.மணிகண்டன்(46). இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், சனிமூலை தெருவைச் சோ்ந்தவா் பா. மகேஷ்வரன் (50). திருமணம் ஆனவா். மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், மகளுக்குத் திருமணம் செய்ய வசதியில்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மகேஷ்வரன் மே 21-ஆம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த வந்த மகேஷ்வரன், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகன்கள் கவனிக்காததால் பெற்றோா் தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை: இளம்பெண் தற்கொலை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
