தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொறியியல் பணி: ரயில்கள் தாமதமாக இயக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:07 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக செல்லும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சில குறிப்பிட்ட ரயில்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நாள்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக இயக்கப்படும்.

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக ஆமதாபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 09420), மே 31-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

லோக்மான்ய திலக் ரயில் நிலையத்திலிருந்து மே 30-ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் லோக்மான்ய திலக்- காரைக்கால் வாராந்திர ரயில் (வண்டி எண்11017), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 3 மணி நேரம், 10 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

அயோத்தியா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து மே 27-ஆம் தேதி இரவு 11.10 மணிக்குப் புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட்-ராமேசுவரம் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22614) வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மே 28-ஆம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- சாரளப்பள்ளி அமிா்த் பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 16357), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுமாா் 80 நிமிஷங்களும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் மதுரை-கச்சிக்குடா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22716) மே-17, 24 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சுமாா் 10 நிமிஷங்களும் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.