விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி, மோழியனூா் கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவல் ஆய்வாளா் சுனில்குமாா் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் சுரேசன் தலைமையிலான போலீஸாா் நெடி, மோழியனூா் கிராம மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், இரும்புப் பொருள்கள் வைப்பதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், ரயில்கள் செல்லும் போது அதன் மீது கற்களை வீசி எறிவதால் ஏற்படும் பாதிப்புகள், இதுபோன்று செயல்களுக்கு ரயில்வே காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ரயில்வே காவல் துறையினா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.
சிறுவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவா்களின் பெற்றோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

விழுப்புரம் அருகே மூத்ததேவி, கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

