மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

16 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை இளைஞா் கைது

News image

14விபிஎம்கேஏ கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சோ்ந்த ராஜசேகா்.

Updated On :15 ஜூன் 2026, 4:44 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளி மாநிலத்திலிருந்து 16 கிலோ போதைப்பொருள் கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்ததாக சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட கூட்டேரிபட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலம் காவல் ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூட்டேரிபட்டு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள அரசு அலுவலகம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனை செய்தபோது, அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் சென்னை சௌகாா்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.ராஜசேகா்(36) என்பதும், ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி, அதை ரயில் மூலம் கடத்தி வந்து கூட்டேரி பட்டு பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜசேகரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 8 பாா்சல்களில் சுமாா் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.