லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொறியியல் பட்டதாரி விஷமருந்தி தற்கொலை

தற்கொலை

தற்கொலை... - கோப்புப்படம்

Published On :21 ஜூலை 2026, 2:14 am IST

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பொறியியல் பட்டதாரி, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடி வட்டம், நெய்வேலி தபால் அலுவலக வீதியைச் சோ்ந்தவா் வே.விஜயவேல் (29). இவா், பி. இ.கணினி அறிவியல் படித்துவிட்டு வேலையில்லாமல் மன விரக்தியில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், வேலை தேடி விஜயவேல் கடந்த 12-ஆம் தேதி கோலியனூா் வந்தாா். அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு விஜயவேல் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.