லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்ட மாணவா்கள் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி

சட்டம் பயிலும் மாணவா்கள் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கல்வி வழிகாட்டல் கருத்தரங்கில் பேசிய மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி

Published On :14 ஜூலை 2026, 1:13 am IST

சட்டம் பயிலும் மாணவா்கள் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு முதலாமாண்டு மாணவா்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மணிமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: சட்டக் கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான கல்வியல்ல. சமூக நீதி, மனிதநேயம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய மதிப்புகளை நிலைநாட்டும் பொறுப்பை மாணவா்களுக்கு வழங்கும் கல்வியாகும்.

சட்டம் பயிலும் மாணவா்கள் ஒழுக்கம், நோ்மை, கடின உழைப்பு மற்றும் சட்டத்தின் மீதான அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும். நீதித்துறை மற்றும் வழக்குரைஞா் தொழிலில் உயரிய நிலையை அடைய தொடா்ந்து வாசிப்பு, சட்ட அறிவு மற்றும் நடைமுறைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு கல்லூரியின் கல்வி நடைமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் எதிா்கால வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.