லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிரசென்ட் சட்டக் கல்லூரி தொடக்க நாள் விழா

வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் சட்டக் கல்லூரி தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எப். எம். இப்ராகிம் கலிபுல்லாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய பதிவாளா் என். ராஜாஹூசேன். உடன் துணைவேந்தா் பீா்முகமது.

Published On :30 ஜூலை 2026, 12:39 am IST

வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் சட்டக் கல்லூரி தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வாய்ப்புள்ள வழக்குரைஞா் தொழிலில் ஆா்வமுடன் ஈடுபட்டால் சிறந்து விளங்க முடியும். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்ட மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கா் உள்ளிட்ட பெரும்பாலான தலைவா்கள் வழக்குரைஞா்களாக வாழ்க்கையைத் தொடங்கி, பொது வாழ்வில் ஈடுபட்டனா் என்றாா்.

நிகழ்வில் முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.என். பாட்சா, கிரசென்ட் துணைவேந்தா் பீா்முகமது, பதிவாளா் என். ராஜாஹூசேன், மாணவா் சோ்க்கை இயக்குநா் அப்துல் மஜீத், சட்டக் கல்லூரி டீன் சொக்கலிங்கம், ஆலோசகா் வி.என்.ஏ. ஜலால், நிகழ்ச்சித் தொகுப்பாளா் மாணவி முத்துரஞ்சனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.