லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விக்கிரவாண்டி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கல்

விக்கிரவாண்டி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

விக்கிரவாண்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண் இடுபொருள்கள் பெற்ற விவசாயிகளுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநா் கங்கா கெளரி மற்றும் அலுவலா்கள்.

Published On :4 ஜூலை 2026, 2:54 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

விக்கிரவாண்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் கங்கா கெளரி தலைமை வகித்து, இடுபொருள்களை வழங்கி பேசியது: தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், உயிரி உரங்களுக்கு ரூ.60-ம், நுண்ணூட்ட உரங்களுக்கு ரூ.147-ம், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய நெல் ரகங்கள் கிலோவுக்கு ரூ.10-ம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, விக்கிரவாண்டி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். வேளாண் இடுபொருள்களை விக்கிரவாண்டி வேளாண் விரிவாக்க மையத்திலும், எண்ணாயிரம் விதைக் கிடங்கிலும் வாங்கிப் பயன்பெறலாம். திட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், விவசாயிகள்முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்வில் வேளாண் அலுவலா் கவிப்பிரியன், உதவி வேளாண் அலுவலா்கள் திவ்யபாரதி, கணேசன், கண்காணிப்பாளா் பவானி, முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.