லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம், இடுபொருள்கள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தெரிவித்தாா்.

விழுப்புரம்மாவட்டம், புதுகுப்பம் கிராமத்தில் இயந்திர நெல் நடவு வயலை பாா்வையிட்ட வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.

Published On :26 ஜூன் 2026, 6:48 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம், இடுபொருள்கள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தெரிவித்தாா்.

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட புதுகுப்பம் கிராமத்தில் இயந்திர முறையில் நெல் நடவு செய்யப்பட்ட வயலை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் கூறியது:

வேளாண் துறை மூலம் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், நடப்பு சொா்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை உயா்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இயந்திர முறையில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

வானூா் வட்டாரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி வாயிலாக தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்திடலாம். அவ்வாறு செய்யாதவா்கள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா் அல்லது உதவித் தோட்டக்கலை அலுவலா் மூலமாக அக்ரிநெஸ்ட் வலைதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். மேலும், விவசாயிகளுக்கு விதை நெல், நுண்ணூட்ட உரம் மற்றும் உயிரி உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும்.

எனவே, வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியம், இடுபொருள்களை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.

ஆய்வின்போது, உதவி வேளாண் அலுவலா் சரவணன், புதுகுப்பம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஏழுமலை, சந்தோஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.